ஆன்மீகம் என்றல் என்ன.ஆன்மீகம் என்பது ஒரு விஞ்ஞானம். ஒரு ஆன்மீக விஞ்ஞானி மெய்ஞானம் அடைகிறார்.மக்கள் அனைவரும் ஆன்மீகத்தை போதிப்பவர்கள் எல்லோரும் கடவுளக்க இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.எதிர்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்றமும் இருக்கும்.மனிதனாக பிறப்பவர்கள் எல்லோருக்கும் மனிதனுக்கு உள்ள அனைத்து குணங்களும் இருக்கும்.காமம்,குரோதம்,அன்பு,பாசம் எல்லாமே மனிதனுக்குள் அடக்கம்.சிலரிடம் அன்பு மிகுந்திருக்கும்.பலரிடம் அன்பு குறைந்து மற்றவைகள் நிறைந்திருக்கும்.அவசர யுகத்தில் அனைவரும் அன்புக்காக ஏங்குகிறார்கள்.அது ஆன்மீகத்தில் கிடைக்கலாம் என்று அத்திசையில் செல்கிறார்கள்.அங்கு குருவும் அவர்களுக்கு ஆன்மீகத்தை அடையும் முறையை அவருக்கு தெரிந்த முறையில் கூறுகிறார்.ஆனால் அவரையே கடவுளாக நினைபதுதான் எல்லா துன்பத்துக்கும் காரணமாக அமைகிறது.நாம் முதலில் நம்மை அறிந்தபின் கடவுளை அறியலாம்.
நன்றி:க.சரவணன்
நன்றி:க.சரவணன்
No comments:
Post a Comment