Friday, February 26, 2010

ஹம்மிங் பறவை

உலகில் இருக்கக்கூடிய பறவை இனங்களில் விசித்திரமானது ஹம்மிங்கு பறவை. இந்த ஹம்மிங்கு பறவையினம் 17 வகைகளை கொண்டுள்ளது அறியப் பட்டுள்ளது. இந்த பறவைகளின் முக்கிய உணவு தேன் என்பதால் தமிழில் தேன்குருவி எனவும் அழைகின்றோம் பறவைகளிலேயே இந்த பறவையினால் மட்டும் வலம் , இடம் , மேல் , கீழ் , பின்பக்கமாக , தலைகீழாக பறக்க முடியும்.இந்த பறவை ஒரு நொடியில் 80 தடவை இறக்கைகளை அசைக்கும் வல்லமை கொண்டது.(இதனால் மனித கண்ணுக்கு இறக்கை துடிப்பது தெளிவாக தெரிவதிலை).ஹம்மிங்கு பறவையின் முக்கிய உணவு தேன் என்பதுடன் இப் பறவையானது பூச்சி , பூக்களின் மகரந்தம் , மரங்களில் இருந்து வடியும் மரபிசின் என்பவற்றையும் உண்கின்றது.ஹம்மிங்கு பறவைகள் இதயத்துடிப்பு , சுவாசம் என்பன மிக வேகமும் , அதிக உடல் வெப்பமும் கொண்டவை , இவை காரணமாக ஹம்மிங்கு பறவைகள் அடிக்கடி உணவை உட்கொள்கின்றன. ஒருநாளில் ஹம்மிங்கு பறவை தனது மொத்த எடையின் மூன்றின் இரு பகுதியளவு (2/3) உணவை உட்கொள்கின்றது.ஹம்மிங்கு பறவை மற்ற பறவைகள் போல் நடப்பதோ அல்லது தத்துவதோ கிடையாது , மாறாக இவை இருந்த இடத்தில் அதிக வேகமான இறக்கை துடிப்புடன் பறந்து செல்கின்றன.மிக அதிவேகமாக மணிக்கு 27 மைல் பறக்க வல்ல ஹம்மிங்கு பறவை திடீரென ஓரிடத்தில் நிறுத்த வல்லன என்பதுடன் வேண்டிய இடத்தில் மிருதுவாக தரை இறங்கும் திறமையும் கொண்டவை.ஹம்மிங்கு தனது நாக்கினை இசை மீட்டவும் , பூச்சிகளை பிடிப்பதற்கும் உபயோகிக்கின்றது.காலநிலை மாற்றத்தின் போது வெவ்வேறு இடத்திற்கு (நாட்டிற்கு) இடம்பெயரும் ஹம்மிங்கு பறவைகளானது 2,000 மைல் தூரம் வரை பறக்க வல்லனவாகும்.ஹம்மிங்கு பறவையின் இறக்கை அதன் தோள் பட்டையில் மட்டும் பல கோண அசைவுகளுக்கு அசையவல்லது . மேலும் இப்பறவை தனது உடலை செங்குத்தாகவும் இறக்கைகளை கிடையாகவும் நிறுத்திய நிலையில் வைத்திருக பறக்க வல்லனவாகும்.

நன்றி:சு.த.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment