Sunday, February 28, 2010

லைரே பறவை

லைரே பறவை (Lyrebirds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினமாகும்.இந்த பறவை மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் மிமிகிரி செய்யும் ஆற்றல் படைத்தது.இந்த பறவையினம் உலகிலேயே ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் தான் காணப்படுகின்றது. இந்த பறவைகள் மயிலின் தோகை போன்ற அமைப்பினையும் குயில் போன்ற உடலினையும் கொண்டுள்ளன. இந்த பறவை வெப்ப பிரதேசங்களிலுள்ள அடர்ந்த காடுகளில் வாழ்கின்றது . இந்த பறவையின் முக்கிய உணவாக மக்கிய மர துண்டுகளில் காணப்படும் புழுக்களையும்,பூச்சிகளையும் உண்கிறது.மேலும் இந்த பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளதுடன் இது தனது பெண் இனத்தினை கவருவதற்காக இந்த பல குரல் விநோதம் செய்வது குறிப்பிடத்தக்கது.இந்த பறவையின் பல் குரல் திறன் காரணமாக இதற்கு லைரே என்ற பெயருடைய பழைமையான இசைக்கருவியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நன்றி:சு.த.இராதாகிருஷ்ணன்

Friday, February 26, 2010

சாக்கே என்றொரு சாராயம்

சாக்கே என்ற சாராயம் ஜப்பானியர்களின் தயாரிப்பாகும்.இது பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்டு ஜப்பானியர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.ஜப்பானியர்களின் விருந்துகளில்லும்,சமையல்களிலும்,சம்பிரதாயங்களிலும்,சடங்குகளிலும் சாக்கே பயன்படுத்தப்படுகிறது.
சாக்கே தயாரிக்க தேவையான முக்கிய பொருள் அரிசியாகும்.சர்க்கரையை நன்றாக பொடித்து அரிசியுடன் சேர்த்து நொதிக்க வைத்து இது தயாரிக்கப்படுகிறது.இது மரங்களிலான சிறு குவளைகளில் ஊற்றி அருந்தப்படுகிறது.பலவகையான சாக்கேகள் ஜப்பானியர்களால் தயாரிக்கப்படுகிறது.சாக்கே பார்ப்பதற்கு நீர் போன்று இருக்கும்.அதன் இனிப்பு சுவை குடிப்பவர்களின் ஆவலை தூண்டும்.


நன்றி:க.சரவணன்

ஹம்மிங் பறவை

உலகில் இருக்கக்கூடிய பறவை இனங்களில் விசித்திரமானது ஹம்மிங்கு பறவை. இந்த ஹம்மிங்கு பறவையினம் 17 வகைகளை கொண்டுள்ளது அறியப் பட்டுள்ளது. இந்த பறவைகளின் முக்கிய உணவு தேன் என்பதால் தமிழில் தேன்குருவி எனவும் அழைகின்றோம் பறவைகளிலேயே இந்த பறவையினால் மட்டும் வலம் , இடம் , மேல் , கீழ் , பின்பக்கமாக , தலைகீழாக பறக்க முடியும்.இந்த பறவை ஒரு நொடியில் 80 தடவை இறக்கைகளை அசைக்கும் வல்லமை கொண்டது.(இதனால் மனித கண்ணுக்கு இறக்கை துடிப்பது தெளிவாக தெரிவதிலை).ஹம்மிங்கு பறவையின் முக்கிய உணவு தேன் என்பதுடன் இப் பறவையானது பூச்சி , பூக்களின் மகரந்தம் , மரங்களில் இருந்து வடியும் மரபிசின் என்பவற்றையும் உண்கின்றது.ஹம்மிங்கு பறவைகள் இதயத்துடிப்பு , சுவாசம் என்பன மிக வேகமும் , அதிக உடல் வெப்பமும் கொண்டவை , இவை காரணமாக ஹம்மிங்கு பறவைகள் அடிக்கடி உணவை உட்கொள்கின்றன. ஒருநாளில் ஹம்மிங்கு பறவை தனது மொத்த எடையின் மூன்றின் இரு பகுதியளவு (2/3) உணவை உட்கொள்கின்றது.ஹம்மிங்கு பறவை மற்ற பறவைகள் போல் நடப்பதோ அல்லது தத்துவதோ கிடையாது , மாறாக இவை இருந்த இடத்தில் அதிக வேகமான இறக்கை துடிப்புடன் பறந்து செல்கின்றன.மிக அதிவேகமாக மணிக்கு 27 மைல் பறக்க வல்ல ஹம்மிங்கு பறவை திடீரென ஓரிடத்தில் நிறுத்த வல்லன என்பதுடன் வேண்டிய இடத்தில் மிருதுவாக தரை இறங்கும் திறமையும் கொண்டவை.ஹம்மிங்கு தனது நாக்கினை இசை மீட்டவும் , பூச்சிகளை பிடிப்பதற்கும் உபயோகிக்கின்றது.காலநிலை மாற்றத்தின் போது வெவ்வேறு இடத்திற்கு (நாட்டிற்கு) இடம்பெயரும் ஹம்மிங்கு பறவைகளானது 2,000 மைல் தூரம் வரை பறக்க வல்லனவாகும்.ஹம்மிங்கு பறவையின் இறக்கை அதன் தோள் பட்டையில் மட்டும் பல கோண அசைவுகளுக்கு அசையவல்லது . மேலும் இப்பறவை தனது உடலை செங்குத்தாகவும் இறக்கைகளை கிடையாகவும் நிறுத்திய நிலையில் வைத்திருக பறக்க வல்லனவாகும்.

நன்றி:சு.த.இராதாகிருஷ்ணன்

Thursday, February 25, 2010

இளம் கலைஞர்கள் அறிமுகம்: என் .ஹச்.பி.ராஜராஜன்

என்.ஹச்.பி.ராஜராஜன் 1983ம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ம் நாள் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார் சு.நடராஜன் ,தாயார் என்.ஹேமலதா ஆவார்.இவர் தன்னுடைய இசை பயிற்சியை அய்யன்பாறவிளை ஜி.கிருஷ்ணன் என்பவரிடம் கற்றார்.இசையில் மேலும் புலமை பெறவேண்டி லயவாத்யசிரோன்மணி வி.சுரேஷ் அவர்களிடம் மாணவராக சேர்ந்து இசையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.மேலும் இவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் இளங்கலை இசையியலிலும் ,திருபுனித்துரா(கேரளா) ஆர்.எல்.வி இசையியல் கல்லூரியில் முதுகலை இசையியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார்.ஆல் இந்திய ரேடியோவின் பி ஹை கிரேடு கலைஞராக தகுதிபெற்று பல இசை நிகழ்சிகளை ரேடியோவில் நிகழ்த்தியுள்ளார்.

இவரைப்பற்றிய என் எண்ணங்கள்

என் .ஹச்.பி.ராஜராஜன் ஒரு சிறந்த கடம் இசைக்கலைஞர் ஆவார்.என்னுடைய சிறுவயதிலிருந்தே இவரை எனக்கு தெரியும்.இவர் அசுர சாதகம் செய்து இந்த உன்னத நிலையை அடைந்திருக்கிறார்.இவருடைய கச்சேரிகளை கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் இவருடைய ஆத்மார்த்தமான இசை உங்கள் இதயத்தோடு இணைந்து துடிப்பதை.நான் மிகைபடுத்தவில்லை வேண்டுமானால் அடுத்த டிசம்பர் சீசனில் இவர் வாசிக்கும் கச்சேரிகளை கேட்டுப்பாருங்கள் அப்போது தெரியும் நான் சொன்னது மிகையல்ல என்று.அவர் இசையில் பல சாதனைகள் புரிந்து நீடூடி வாழ என் வாழ்த்துகளை இந்த மயிலஞ்சலில் பதிவு செய்கிறேன்.


நன்றி:சு.த.இராதாகிருஷ்ணன்

ஈஸ்ட்டர் தீவுகள்

ஈஸ்ட்டர் தீவுகள் தெற்கு பசிபிக் கடலில் இருக்கிறது.இது 20 கி.மீ நீளமும் 15 கி.மீ அகலமும் கொண்ட ஒரு சிறிய தீவாகும்.இந்த தீவுகளில் ரபனாய் என்ற மனித நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.இங்கு 12 மீட்டருக்கும் அதிகமான உயரம் உள்ள 100க்கும் மேற்பட்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட சிலைகள் காணப்படுகின்றன.இந்த சிலைகளை செய்வதற்காக இங்குள்ள மரங்களை அழித்தனர்.அதுவே இந்த நாகரீகம் அழிந்ததற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.இப்போது இங்கு எலிகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன என்பது குறிப்பிடதக்கதாகும்.இவைகள் ரபனாய் நாகரீகத்தின் சம காலத்தில் வாழ்ந்த எலிகளின் சந்ததியினர்.இந்த எலிகள் கூட அவர்கள் நாகாரீகம் அழிந்ததற்கான ஒரு காரணமாக இருக்ககூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

நன்றி:எழுச்சி குமார்