Tuesday, April 5, 2011

சே குவேரா


சே குவேரா  என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா  (ஜூன் 14, 1928 - அக்டோபர் 9, 1967 அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு , மருத்துவர், சோசலிசப் புரட்சியாளர் மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின்  புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் சே குவேரா
கியூபாவில் புரட்சி காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேராபொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)

இளமைக்காலம்சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் ஆர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.

அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.

கார்ல் மார்க்ஸ்


கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒருயூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார்.

பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.

1841 இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சிலகாலம் பத்திரிகைத்துறையில் இருந்தார். சிறிது காலத்திலேயே ஜனவரி 1, 1843இல் தடைக்குள்ளான றைனிஷ் ஸைற்றுங் எனும் எதிர்க்கட்சி செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.

இக்காலப்பகுதியில் லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான் 21 வயதுடைய ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதலுறவு ஏற்பட்டது. இதன்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக்குடும்பத்தைச்சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் தமது காதலை இரகசியமாக வைத்திருந்து ஜெனிக்கு 29 வயதாயிருந்தபோது அவரை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே ஒவ்வொன்றினதும் புரட்சிகர இயக்கங்களில் பங்குபற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ், 1843இற்கும் 1849 இற்கும் இடையே புலம் பெயர்ந்த வாழ்க்கையினை வாழ்ந்தார்.

1849 ஓகஸ்ட் 24 இல் பிரான்சில் உள்ள பிறிற்றனியில் சதுப்பானதும் உடல் நலத்துக்கு ஒவ்வாததுமான இடமொன்றுக்கு நாடுகடத்துமாறான பிரேஞ்சு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிய மறுத்து லண்டனுக்கு சென்று குடியேறி 35 ஆண்டுகளான தனது சீவியகாலத்தின் மிகுதியை அங்கேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் அகதிகட்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெருமெடுப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான பிரித்தானிய மியூசியத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்ஸ் நாள் தவறாது அங்கு சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்கு செலவிட்டு வந்தார். அங்கேதான் மூலதனம் எனும் நூல் தோற்றம் பெற்றது.

மார்க்ஸ், ஏங்கல்சை 1844 ஓகஸ்ட் 28க்கும் செப்டெம்பர் 6க்கும் இடையே பாரிசில் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவரும் தம்மிடையே நட்புறவு கொள்ள ஆரம்பித்தனர்.

மார்க்சின் பெற்றோர் இறந்த சமயம் அவருக்கு மரபுரிமையாக சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கழகத்தின் பதிநான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் இடமிருந்து ஆறு நூறு பவுண் அளவில் விருப்புரிமைக்கொடையை மரபுரிமையாக பெற்றார்.

1850களின் முதல் பாதியில் நாடுகடந்து லண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்ஸ் தீவிரமான வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடைமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சினது முக்கியமான வருமானமாக இருந்தது. நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதிவந்தபோதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அவ்வேட்டின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது . ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பிரசுரமாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயரக்கூடியதாக இருந்தது. வருமானம் குறைவாக இருந்ததனால் மார்க்ஸ் பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்துவந்தார். எனினும், தனது மனைவியினதும் பிள்ளைகளினதும் சமூகத் தகுதி காரணமாக ஓரளவு பூர்ஷ்வா ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

மார்க்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு பிள்ளைகள் பிறந்தனர். எனினும் மூன்று பிள்ளைகள் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டன. மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 ஜூலையில் பெயரிடு முன்னரே இறந்துவிட்டது.


இலண்டன், ஹைகேட் மயானத்திலுள்ள கார்ல் மார்க்சின் கல்லறை1881 ஆம் ஆண்டு டிசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்ஸ் 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி மார்க்ஸ் இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்ஸ் இலண்டனிலுள்ள ஹைகேட் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான "உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்" (Workers of All Land Unite)என்பதும், "மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே" என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் என்பவர்களும் அடங்குவர். ஏங்கெல்ஸ் பேசும்போது,

"மார்ச் 14 ஆம் தேதி மூன்று மணிக்கு கால்மணிநேரம் இருந்தபோது வாழ்ந்துகொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பிவந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்." என்றார்.
மார்க்சின் கல்லறை 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சியால் அமைக்கப்பட்டது. இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முன்னைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.

Georg Wilhelm Friedrich Hegel என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்சு தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

மார்க்சின் சிந்தனைகள்மார்க்சைப்போல மார்சியவாதிகளாலும், எதிர்ப்பாளர்களாலும் ஒன்றுபோலவே பிழையாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என அமெரிக்க மார்க்ஸ் பற்றி ஆய்வு செய்தவரான ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

மார்க்ஸ் சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவைமார்க்சினது சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. பின்வருவன அவற்றுள் சில.

ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.
பிரெஞ்சு சோசலிச மற்றும் சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.
முந்திய ஜெர்மானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக்.
பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டுதுண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும் சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராக தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்று ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்துவந்ததுடன், கிறிஸ்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் அவர் எதிர்வுகூறினார்.

மெய்யியல்மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடைப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்ஸ் கருதினார் அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைப்புச் சக்தி என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை இது ஒரே சமயத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.


ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக்கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்.

மார்க்ஸ்சின் ஆக்கங்கள்
Introduction to a Critique of Hegel's philosophy of Right- சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம்,1843.
The Poverty of Philosophy - தத்துவத்தின் வறுமை,1847.
Discourse upon The Question of Free Exchange - சுதந்திரமான நாணயமாற்றுக்கேள்வி பற்றிய சொற்பொழிவு,1848.
The communist Manifesto - கம்யூனிஸ்ட் அறிக்கை,1848.
Das kapital- மூலதனம்
Introduction to the Critique of Political Economy - அரசியல் பொருளாதார திறனாய்விற்கு அறிமுகம்,1859.

சர் அலெக்ஸாண்டர் பிளெமிங்



சர் அலெக்ஸாண்டர் பிளெமிங்(ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.

பெனிஸிலின் கண்டுபிடிப்புஉலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிஸிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிஸிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிஸிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிஸிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.

பிறப்பு
ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது.

பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர்படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார்.

நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.

பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோஸைம்’ எனப் பெயரிட்டார்.

காளானிலிருந்து பெனிஸிலின்
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோஸைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிஸிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிஸிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிஸிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர்.

1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Friday, April 1, 2011

சீனிவாச இராமானுசன்


கணித மேதை இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராகப் பணியாற்றி வந்தனர். தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.


கணக்கியலர்
கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன்.

கற்பிக்கப்படாத மேதை மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851). ஆனால் இவ்விருவருக்கும் கல்லூரிப் படிப்பின் முழு வலுவும் ஆழமான அடித்தளமாக இருந்தது. இராமானுஜனுக்கோ முறையான கல்லூரிப் படிப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எவரும் அவரை திருத்திக் கற்பிக்கும் முன்னமேயே அவர் ஒரு பெரிய கணித வல்லுனர் ஆகிவிட்டார். ஒருவேளை அப்படிக் கற்பிக்கப் படாதிருந்ததால் தான் அவரால் அவ்வளவு சாதிக்க முடிந்ததோ என்னமோ? அப்படி திருத்தப்பட்டிருந்தால் அவர் கணிதத்தில் எடுத்துவைத்த அடிகள் ஒவ்வொன்றும் அவரை தயக்கப்படவும் செய்து பின்னுக்கு இழுத்திருக்கலாம். ஆய்லருடனோ அல்லது ஜாகோபியுடனோ, ஏன், எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை ‘படிக்காதவர்’ என்றே கூறவேண்டும். தன்னால், தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18, 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது. இவ்வளவிருந்தும், ஒரு சில சம்பவங்களின் திருப்பங்களன்றி அவரை இக்கணித உலகம் அறவே இழந்திருக்கவும் கூடும் என்பதும் உண்மையே.

பள்ளிப் பருவத்திலேயே கணித ஆய்வுபழமையில் ஊறியிருந்த தென்னிந்திய பிராம்மண குடும்பத்தில் அவர் பிறந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவனுக்கு கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியில் அரைச்சம்பளக் கல்விச் சலுகை கிடைத்தது. 12வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7, 8 வயது சிறியவனான இப்பள்ளி மாணவன் இக்கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும் அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஒரே வியப்பு. முக்கோணவியல் என்ற பெயர் இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித விஷயங்கள், உதாரணமாக, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய விஷயங்கள், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products) இதைப்போன்ற கணிதத்தின் உயர்தரப் பொருள்களெல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாகத்தான் இருந்ததென்றாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இவ்வுயர் கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு. இதைவிட ஒரு தரமான புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். விட்டேகருடைய ‘தற்காலப்பகுவியல்’ (Modern Analysis) உலகத்தில் அப்பொழுதுதான் வந்துவிட்டிருந்தது ஆனால் கும்பகோணம் வரையில் வரவில்லை. பிராம்விச்சுடைய முடிவிலாத்தொடர்கள் (Infinite Series), கார்ஸ்லா வுடைய ஃபோரியர் தொடரும் தொகையீடுகளும் (Fourier Series and Integrals), பியர்பாயிண்டுடைய மெய்மாறிச் சார்புகளின் கோட்பாடு (Theory of functions of a real variable), ஜிப்ஸனுடைய நுண்கணிதம் (Calculus) ஆகியவைகள் அப்பொழுதுதான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவையெல்லாம் இராமானுஜனுக்குக் கிடைத்திருந்தால் கணித உலகின் வரலாறே மாறியிருக்குமா இருக்காதா என்பதில் இன்றும் கணித இயலர்களுக் கிடையில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்")சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.

இளமையும் கல்வியும்
இராமானுசன் அஞ்சல் தலை1903 டிசம்பரில் சென்னைப் பல்கலையின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறினான். அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F.A. (இந்தக்காலத்து 11, 12 வது) வகுப்பிற்கு ‘சுப்பிரமணியம் உபகாரச்சம்பளம்’ பெற்றான். அவன் கற்க வேண்டியிருந்த பாடங்கள் ஆங்கிலம், கணிதம், உடற்செயலியல், ரோமானிய கிரேக்க வரலாறு, மற்றும் வடமொழி. ஆனால் கணிதம் தான் அவனுடைய காலத்தையும் சக்தியையும் விழுங்கிக்கொண்டது. கணிதம் தவிர மீத மெல்லாவற்றிலும் தேர்வில் தோல்வியே கண்டான். உபகாரச் சம்பளத்தை இழந்தான். கும்பகோணத்தை விட்டு எங்கோ ஆந்திர மண்ணில் தன்னை இழந்து சுற்றித் திரிந்தான். ஓராண்டு காலம் கழித்துத் திரும்பி கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கே வந்து சேர்ந்தான். ஆனால் 1905 டிசம்பர் தேர்வுக்கு வேண்டியிருந்த உள்ளமைச் சான்று (attendance certificate) கிடைக்காததால் தேர்வு எழுத முடியவில்லை. கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவனை இழந்தது.

1907-11 இல் படைப்பு வெள்ளம்ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம் (Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள் (Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம், சென்னைப்பல்கலைக் கழகம், ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்.[1]

சீனிவாச இராமானுஜன் தனது 22வது வயதில் ஒன்பதே வயது நிரம்பியிருந்த ஜானகியைக் கைப்பிடித்தார். 1910இல் இந்தியக்கணிதக் கழகத்தைப்பற்றி கேள்விப்பட்டார். இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர்தான் இக்கழகம் இணை ஆட்சியராக இருந்த பேராசிரியர் வி. ராமஸ்வாமி அய்யர் என்பவரால் துவக்கப்பட்டிருந்தது. இராமானுஜன் அவரது உதவியை நாடி திருக்கோவிலூருக்கு ஓடினார். இராமானுஜன் என்ற மேதையை உலகுக்கு அறிவிக்கும் கலங்கரை வெளிச்சத் தொடர் சங்கிலியில் முதல் வளையமாக இருந்தவர் இந்த ராமஸ்வாமி அய்யர் தான். அவருடைய அறிமுகத்தில் பேராசிரியர் சேஷு அய்யர் அணுகப்பட்டார். அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திவான் பகதூர் ஆர். ராமச்சந்திரராவிடம் அனுப்பினார். டிசம்பர் 1910 இல் முதலில் நடந்த சந்திப்பில் வள்ளல் ராமச்சந்திர ராவினுடைய மனதைத் தொட்ட போதிலும் இராமானுஜனின் மேதை அவருடைய அறிவைத் தொடவில்லை. அடுத்த முறை சந்தித்தபோது இராமானுஜன் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவைகளை மாத்திரம் காட்டினார். அவைகளிலிருந்து அவர் இராமானுஜன் கணிதத்தில் சாதனை செய்யக்கூடியவர் என்று அறிந்து கொண்டு இராமானுஜனுடைய செலவுகளைச் சிறிது காலத்திற்கு தானே ஏற்று நடத்தி வந்தார்.

இராமானுஜன் இவ்வேற்பாட்டை நெடுநாள் வைத்துக் கொள்வதில் விருப்பமில்லாமல் சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911 இல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் (Journal) இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதற்குள்ளாக, சென்னை துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் என்பவரும் இராமானுஜத்தைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார். துறைமுக அலுவலகத்தில் ஓர் எழுத்தர் கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக் கூடங்களில் பேசப்படத் துவங்கியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவருக்கு ஒரு நிலையான உதவிச் சம்பளம் வாங்கித் தந்துவிட பல பேர் முயன்றனர். இந்த முயற்சியில் சம்பந்தப்பட்டவர்கள் ராமச்சந்திர ராவ், சென்னை பொறியியல் கல்லூரிப் பேரா. சி.எஸ்.டீ. க்ரிஃப்பித், லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேரா. எம். ஜி.எம். ஹில், முனைவர் கில்பர்ட் வாக்கர் (தலைவர், இந்திய வானிலைத்துறை), பேரா.பி. ஹனுமந்த ராவ் (தலைவர், சென்னை பல்கலைக் கழகத்தின் பாட மையம்), மற்றும் நீதிபதி பி. ஆர். சுந்தரம் அய்யர். இந்த முயற்சிக்கெல்லாம் பயன் கிடைத்தது. மே 1, 1913 முதல் இராமானுஜன் (அவரது 26வது வயதில்) சென்னை பல்கலைக் கழகத்தில் மாதம் ரூ.75 சம்பளத்துடன் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். அன்று தொடங்கி அவருடைய குறுகிய ஆயுள் முடிய அவருக்கு இந்த ஆராய்ச்சி தான் தொழில்.

பேரா. ஜி. ஹெச். ஹார்டி1913 ஜனவரியில் பேரா. சேஷு அய்யரும் அவருடன் இன்னும் சிலரும் சேர்ந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் இல் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு கடிதம் எழுதவைத்தனர். இராமானுஜனும் கடிதத்தை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் (நிறுவல் எதுவும் இல்லாமல்) அனுப்பித்தார். இக்கடிதம் கிடைத்தவுடன் பேரா. ஹார்டியின் முதல் எண்ணம் அக்கடிதம் குப்பையில் போடப்படவேண்டியது என்பதுதான். ஆனால் அன்று மாலை அவரும் இன்னொரு பேரா. லிட்டில்வுட்டும் சேர்ந்து அதை மறுபடியும் படித்துப் பார்த்த பொழுது, அது அவர்கள் இருவரையும் தீவிர ஆலோசனையில் ஆழ்த்தியது. அதில் பல தேற்றங்கள் அவர்களுக்கு புதிதாகவே இருந்தன. ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன. புதிதாக இருந்தவைக்கு நிறுவல்கள் கொடுக்கப் படாமலிருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப் பார்த்தார்கள். சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது. சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்யவேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது. ஆனால் பல தேற்றங்களை அவர்கள் அணுகவும் முடியவில்லை, அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை. உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப் பட்டவர்களான அவர்களாலேயே அத்தேற்றங்களின் உண்மையைப் பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில், இரு வல்லுனர்களும் அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. அத்தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம்.

ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது சுற்றுச் சூழலின் பாதிப்பை மீறி நாட்டை விட்டுப் புறப்பட்டது மார்ச் 1914இல்தான்.

நான்கு பொன்னான ஆண்டுகள்கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் கூட இருந்த நான்கு ஆண்டுகளும் (1914-1918) இராமானுஜனுக்கு மட்டுமல்ல பேராசிரியர் ஹார்டிக்குமே பொன்னான ஆண்டுகள் தாம். இதை ஹார்டியே சொல்கிறார். பிற்காலத்தில், இராமானுஜன் யாருமே எதிர்பார்க்காத 32 வயதிலேயே மரணமடைந்த பிறகு ஹார்டி அவரைப் பற்றி சொல்லும்போது ‘இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னின்ன புத்தகங்களைப் பார்த்திருந்தாரா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒருவேளை சொல்லி யிருப்பாரோ என்னமோ. ஆனால் ஒவ்வொருநாள் நான் அவருக்கு காலை வணக்கம் சொல்லும்போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களை காட்ட ஆயத்தமாயிருந்ததால் எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அதைப் படித்திருக்கிறாயா, இதைப் படித்திருக்கிறாயா என்று கேட்பதும் பொருத்த மில்லாமலிருந்தது’. இராமானுஜனுடைய படைப்பாற்றல் அவ்வளவு வேகமாக இருந்தது. இருந்தாலும் பேரா. ஹார்டி இராமானுஜனுக்கு சில தேவையான் விஷயங்களை சொல்லிக் கொடுக்கத்தான் செய்தார். காரணம், இராமானுஜன் அவையில்லாமல் மாற்று வழிகளுக்காக நேரத்தை செலவழித்து விடுவாரோ என்ற பயம்தான். ஆனால் ஹார்டியே பின்னால் சொல்கிறார் ‘நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கொடுத்தது சரிதானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக்கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதை தடை செய்திருக்கவும் கூடுமல்லவா?’. இன்னமும் சொல்கிறார்: ‘நான் அவருக்கு சொல்லிக்கொடுத்ததுதான் சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதை விட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்’.

இந்நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக்கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் ஃபெல்லோவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.

சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் சார்பில் ராமானுஜனுக்காக ஒரு நிலையான ஏற்பாட்டைச்செய்தது. அவர் அதுவரை பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு உபகாரச்சம்பளம் முடியும் நாளான ஏப்ரல் 1, 1919 இலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு ஆண்டுக்கு £250 நிபந்தனையற்ற சலுகை தருவதாக ஏற்பாடு செய்தது. புதிதாக கல்வி இயக்குனராகப் பதவியேற்றிருந்த பேரா. லிட்டில்ஹெய்ல்ஸ் அப்பொழுதுதான் மும்பையில் நடந்திருந்த இந்திய கணிதக்கழகத்தின் ஆண்டு மகாநாட்டிலிருந்து திரும்பி வந்திருந்தார். அம்மகாநாட்டில் இராமானுஜனுடைய சாதனைகளைப் போற்றித் தீர்மானங்கள் நிறைவேறியிருந்தன. பேரா. லிட்டில்ஹெய்ல்ஸும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியர் பதவி ஒன்று உண்டாக்குவதற்காகவும் அந்தப் பதவிக்கு இராமானுஜனுக்கு அழைப்பு விடுப்பதற்கும் பல்கலைக் கழகத்தை கேட்டுக்கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் காலச்சக்கரம் வேறு விதமாகச் சுழன்றது.

ஒரே ஒரு இராமானுஜன் கணிதத்துளிஇராமானுஜனுடைய கணிதமேதையை எடுத்துக்காட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு துளியை கீழே காண்போம்.

முனைவர் பி.சி. மஹலனொபிஸ் என்பவர் நேரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டியவர். அவர் இராமானுஜன் கேம்பிரிட்ஜில் வசித்த காலத்தில் அவரும் அங்கு படித்துக் கொண்டிருந்தார். இராமானுஜனுடைய நண்பர். இருவரும் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒருநாள் இராமானுஜன் அவரை தன் விடுதிக்கு மதிய உணவருந்த கூப்பிட்டிருந்தார். இராமானுஜன் சமையல் அடுப்பருகில் வேலையில் ஈடுபட்டிருந்ததால், வந்தவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டிராண்ட் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதனில் ஒரு கணிதப் புதிர் இருந்தது. அப்பொழுது முதலாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம். “பாரிஸ் நகரில் ஒரே தெருவில் இரண்டு வீடுகளில் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்; வீட்டு கதவிலக்கங்கள் தெரியவில்லை, ஆனால் இரண்டு இலக்கங்களினூடே ஒரு கணிதத் தொடர்பு இருக்கிறது, கதவிலக்கங்கள் என்னவாக இருக்கும்?” இதுதான் புதிர். சிறிது நேரம் யோசித்ததில் மஹலனோபிஸ்சுக்கு விடை புரிந்துவிட்டது. அவர் பரபரப்புடன் அதை இராமானுஜனுடன் பகிர்ந்துகொள்ள விருப்பப் பட்டார். இராமானுஜன் சாம்பாரை கலக்கிவிட்டுக் கொண்டே, ‘சொல்லுங்கள் கேட்போம்’ என்றார். மஹலனோபிஸ் பிர்ச்சினையை எடுத்துரைத்தார். அவர் தன் விடையைச் சொல்லுமுன்பே இராமானுஜன், ‘சரி, இந்த தொடர் பின்னத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொடர் பின்னத்தைக் கூறி அதுதான் விடை என்றார்.

இது நமக்குப் புரிவதற்கு ஸ்டிராண்ட் பத்திரிகையில் இருந்த புதிரின் விபரம் தான் என்ன என்று தெரியவேண்டும். ஆனால் அவ்விபரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இராமானுஜனின் மின்னல்வேக விடையைப் புரிந்து கொள்வதற்கு நாமாகவே அப்பத்திரிகைப் புதிர் என்ன மாதிரியில் இருந்திருக்கும் என்று ஊகிக்கலாம். இரண்டு கதவிலக்கங்களைக் கண்டுபிடிப்பது தான் பிரச்சினை. கதவிலக்கங்களை x, y என்று அழைப்போம். அவைகளுக்குள் இருந்த தொடர்பையும் நாம் இப்படி வைத்துக் கொள்ளலாம்:

x2 − 10y2 = + 1or − 1

மஹலனோபிஸ் இதைப் பார்த்ததும் ஓரிரண்டு எண்களைப் பொருத்திப் பார்த்தார். x = 3, y = 1 என்ற விடை கிடைத்தது, கிடைத்தவுடன் இராமானுஜனுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார். ஆனால் இராமானுஜன் பிர்ச்சினையைக் கேட்டவுடனேயே, சாம்பாரைக் கலக்கிக்கொண்டே, இதன் விடை ஒரு தொடர் பின்னத்தில் இருக்கிறது என்று கீழ்வரும் தொடர் பின்னத்தை சொன்னார்:



இதன் பொருளை இராமானுஜனே விளக்கினார்.

இத்தொடர்பின்னத்தின் ஒவ்வொரு ஒருங்கும் ஒவ்வொருவிடையாகும். முதலாவது ஒருங்கு 3/1. x = 3, y = 1 என்பது முதல் விடை. இராமானுஜனுடைய் தொடர்பின்னவிடை அந்தத்தெருவில் முடிவிலாத எண்ணிக்கையில் வீடுகள் இருப்பதாக வைத்துக்கொண்டு, மஹலனொபிஸின் ஒரே விடைக்கு பதிலாக முடிவுறா எண்ணிக்கையில், தொடர்ந்து பல சரியான விடைகள் கொடுக்கின்றன. ஆக, மேற்படி தொடர்பின்னத்தின் 2வது ஒருங்கு

3 + 1/6 = 19/6.

x =19, y = 6 இரண்டாவது விடை.

192 − 10 * 62 = 361 − 360 = 1

மூன்றாவது ஒருங்கு:



இது கொடுக்கும் விடை: x = 117, y = 37

இதுவும் ஒரு சரியான விடைதான்.

நான்காவது ஒருங்கு 721/228. x = 721 y = 228.

இப்படியே போகிறது இராமானுஜனின் தொடர்பின்ன விடை. இராமானுஜனுடைய மேதை அவர் பிரச்சினையைக் கேட்டவுடனேயே இதற்கு விடை முடிவுறா தொடர்பின்னம் தான் என்று கண்டு கொண்டு அத்தொடர் பின்னத்தையும் உடனே கொடுத்தது தான்.

இன்னொரு நோட்புக்கின் அற்புதம்துரதிருஷ்டவசமாக இராமானுஜன் இங்கிலாந்தில் ஐந்தாவது ஆண்டை மருத்துவ விடுதிகளில் கழிக்கவேண்டி ஏற்பட்டது. ஏப்ரல் 1919 இல் இந்தியா திரும்பினார். தீராத வியாதியும் கூடவே வந்தது. ஆனால் அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. இப்படித்தான் உண்டாயிற்று “இராமானுஜத்தின் தொலைந்துபோன நோட்புக்”. அது 1976இல் கண்டுபிடிக்கப்பட்டு 1987 இல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புதையலில் 600 அற்புதமான தேற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அநேகமாக வெகு உயர்மட்டத்திலிருந்த “Mock Theta functions” என்பவைகளைப் பற்றியது இராமானுஜன் 1919-20 இல் செய்த ஆராய்ச்சிகள்.

ஆக, இராமானுஜன் கணித உலகிற்காக விட்டுப்போனது:

• மூன்று நோட்புக்குகள்

• சென்னைப் பல்கலைக் கழகத்திற்காக கொடுக்கப்பட்ட மூன்று காலாண்டு அறிக்கைப் பத்திரங்கள் (1913-1914)

• 138 பக்கங்கள் கொண்ட தொலைந்து போன நோட்புக்

• கணித இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட 32 ஆய்வுக்கட்டுரைகள்

இராமானுஜனின் உள்ளுணர்விலிருந்து உதயமான இக்கணிதச் சொத்து உலகின் நான்கு மூலைகளிலுள்ள கணித வல்லுனர்களையும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் ஈர்த்து இருபதாவது நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்று பெயர் எடுத்துவிட்டது. பால் ஏர்டோசு என்ற புகழ்பெற்ற கணித மேதை-வல்லுனர் பேரா. ஹார்டி சொன்னதாகச் சொல்கிறார்: ‘நாம் எல்லா கணித இயலர்களையும் அவர்களுடைய மேதைக்குத் தகுந்தாற்போல் வரிசைப்படுத்தி சூன்யத்திலிருந்து 100 வரை மதிப்பெண் கொடுத்தால் எனக்கு 25ம், லிட்டில்வுட்டுக்கு 30ம், ஹில்பர்ட்டுக்கு 80ம் இராமானுஜனுக்கு 100ம் கொடுக்க வேண்டி வரும்’

Sunday, March 20, 2011

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.

பட்டினத்தாரின் பாடல்கள் 11-ஆவது சைவ திருமுறைகளில் வைத்துப் போற்றப்படுகின்றது.


ஞானம் பிறந்த கதை
சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார்.

அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.

பட்டினத்தடிகள்
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.

அன்னையின் ஈமச் சடங்கு
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
[தொகு] பத்திரகிரியார் தொடர்பு
பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.

பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்
சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

கோயில் நான்மணி மாலை
திருக்கழுமலை முமணிக்கோவை
திருவிடைமருதூர் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.

எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்



மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள் பின்



ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே...



நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
[தொகு] திருவொற்றியூரில் சமாதி
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் சென்னைக்கு அருகே உள்ள திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப்போல் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.

இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும் பத்தி (பக்தி) வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.

அருணகிரிநாதர் வரலாறு
திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.

என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.

திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.

அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.

மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.

சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.

தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.

Thursday, March 17, 2011

தாயுமானவர்

தாயுமானவர்
தாயுமானவர் (1705 - 1742) அவர்கள் தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர்.

வாழ்க்கைக் குறிப்புதாயுமானவர் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார்:கேடிலியப்ப பிள்ளை, தாயார்: கெஜவல்லி அம்மாள். இவர்வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.
தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர்; வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு.பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

தாயுமானவர் செய்த ஆக்கங்கள்தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய 'பராபரக் கண்ணி' மிகவும் புகழுடையது. பராபரக்கண்ணியில்,


“ "“அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே!”


என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736-ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் 'தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு' என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும் இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் மிகுந்துள்ளன.

“ "சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்

மனம் அடங்கக் கல்லார்க்கு 'வாயேன்' பராபரமே”


(இருபொருள்: வாய்க்க மாட்டேன், வாய் ஏன்)

“ எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே



என்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.

Tuesday, March 8, 2011

பெர்முடா முக்கோணம்


பெர்முடாமுக்கோணம் (சைத்தானின்முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு பகுதி.அங்கு நிரைய வானூர்திகளும், கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர்களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.[1]

நிரைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிரைய அதிகாரப்பூர்வ முகவாண்மைகளும் பதிவு செய்துள்ளன





முக்கோணப் பகுதி
முக்கோணத்தின் பகுதி ஆசிரியருக்கேற்ற வகையில் மாறுகிறது
இந்த முக்கோணத்தின் எல்லைகளில், புளோரிடா நீரிணைப்பு, பஹாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகள் பகுதி மற்றும் அட்லாண்டிக் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை அடங்கும்; இன்னும் சிலர் [who?] அதனுடன் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கின்றனர். புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் ஒர் இடம்; சான் ஜுவான், பூர்டோ ரிகோ; மற்றும் பெர்முடாவின் மத்திய-அட்லாண்டிக் தீவு ஆகியவை தான் பல பிரபலமான எழுத்துப் படைப்புகளில் முக்கோண எல்லைகளாக குறிப்பிடப்படுகின்றன. விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றிய தெற்கு எல்லைப்பகுதியில் தான் குவியம் கொண்டுள்ளது.

இந்த பகுதி உலகின் மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து பகுதியாக இருக்கிறது. இதன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு தினந்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. சொகுசுக் கப்பல்கள் ஏராளமாய் உள்ளன. பொழுதுபொக்கு விமானங்கள் எப்போதும் புளோரிடாவுக்கும் தீவுகளுக்கும் இடையில் போகவும் வரவுமாய் உள்ளன. வடக்கிலிருக்கும் இடங்களில் இருந்து, புளோரிடா, கரீபியன், மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான வர்த்தக மற்றும் தனியார் விமானங்கள் செல்கின்றன.

முக்கோணக் கதையின் வரலாறு[தொகு] மூலங்கள்முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட செய்தியைத் தான் குறிப்பிட வேண்டும்.[5] இரண்டு வருடங்களுக்கு பின், ஃபேட் இதழ் 'நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது.[6] பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் தொலைந்து போனதை இது எழுதியிருந்தது. பிளைட் 19 என்னும் அமெரிக்க கடற்படையின் குண்டுவீசும் ஐந்து விமானங்கள் கொண்ட ஒரு கூட்டம் ஒரு பயிற்சி நடவடிக்கையின் போது தொலைந்து போனதும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மறைவுகள் நிகழும் பிரபலமான முக்கோண பகுதிக்கு வரைபடமிட்டது சாண்டின் கட்டுரை தான்.அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது.[7] "நாங்கள் இப்போது எங்கிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியவில்லை" என்று விமான ஓட்டி கூறியதாக அச்செய்தி தெரிவித்தது. கப்பற்படை விசாரணைக் குழுவின் அதிகாரிகள் விமானங்கள் "செவ்வாய்க்கு பறந்து போனதாய்" கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுரை தான் பிளைட் 19 காணாமல் போன சம்பவத்துடன் அமானுட விஷயங்களை இணைத்து எழுதப்பட்ட முதல் கட்டுரை. ஆனால் வின்சென்ட் காடிஸ் என்கிற மற்றுமொரு ஆசிரியர் 1964 பிப்ரவரியில் அர்கோசி இதழில் எழுதும்போது தான், பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை "மரண பெர்முடா முக்கோணம்" (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது) என்னும் ஈர்க்கும் தலைப்பின் கீழ் எழுதினார்.[8] அடுத்த ஆண்டில் அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார்.[9] ஜான் வாலஸ் ஸ்பென்சர் (லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969);[10] சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா டிரையாங்கிள் , 1974);[11] ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்'ஸ் டிரையாங்கிள், 1974),[12] ஆகியோரின் மற்ற பல படைப்புகளும் வெளியாயின. எல்லாமே எக்கெர்டினால் கோடிட்டுக் காட்டப்பட்ட அதே அமானுட விஷயங்களில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டன.

லாரி குசெஅரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு நூலகரும் தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்டரி: சால்வ்டு (1975)[14] புத்தக ஆசிரியருமான லாரன்ஸ் டேவிட் குசெ தான் இந்த போக்கினை மறுதலித்தார். குசெவின் ஆய்வு பெர்லிட்ஸ் பதிவுகளுக்கும் ஆரம்ப சம்பவங்களில் பார்த்தவர்கள், இருந்தவர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் இருந்தான கூற்றுகளுக்கும் இடையில் இருந்த எண்ணற்ற துல்லியமின்மைகளையும், குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது. பல சம்பவங்களில் தொடர்புபட்ட தகவல்கள் ஆய்வு செய்யப்படாமல் போனதை குசெ சுட்டிக் காட்டினார். உலகம் சுற்றும் படகுப்பயணியான டொனால்டு குரோஹர்ஸ்ட் தொலைந்து போன சம்பவத்தை இதற்கொரு உதாரணமாய் காட்டினார். இச்சம்பவத்தை பெர்லிட்ஸ் ஒரு மர்மம் என கூறியிருக்க, இதற்கு மாறான உண்மைக்கு தெளிவான சான்று இருந்தது. மற்றுமொரு உதாரணம், அட்லாண்டிக் துறைமுகத்தில் இருந்து தாது-கப்பல் ஒன்று மூன்று நாட்கள் அடையாளமின்றி தொலைந்து போனதாக பெர்லிட்ஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உண்மையில் பசிபிக் கடலில் இருந்து அதே பெயரிலான கப்பல் ஒரு துறைமுகத்தில் இருந்து மூன்று நாட்கள் சுவடில்லாமல் தொலைந்திருந்தது. முக்கோணத்தின் மர்மத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவங்களில் பெரும் சதவீதம் அதற்கு வெகு வெளியே நிகழ்ந்தவை என்றும் குசெ வாதிட்டார். பல சமயங்களில் அவரது ஆராய்ச்சி எளிமையானது. சம்பவம் நடந்த தேதிகளில் வெளியான பொதுவான செய்தித்தாள்களை பார்ப்பார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அசாதாரண காலநிலை போன்ற பொருத்தமான நிகழ்வுகளை, வாகனங்கள் தொலைந்த கதைகளில் குறிப்பிடாதவற்றை கண்டறிவார்.

குசெ இவ்வாறு முடிவுக்கு வந்தார்:

ஒப்பீட்டளவில் பார்த்தால், கடலின் வேறு எந்த பகுதியினையும் விட இந்த பகுதியில் தொலைந்து போகும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு பெரியது அல்ல.
வெப்பமண்டல புயல்கள் அதிகமாக நிகழும் ஒரு பகுதியில், நிகழ்ந்திருக்கக் கூடிய தொலைதல்களின் எண்ணிக்கை வரம்புகடந்ததாகவும் இல்லை, மர்மமானதாகவும் இல்லை; தவிர, பெர்லிட்ஸ் மற்றும் பிற ஆசிரியர்கள் இத்தகைய புயல்கள் குறித்து குறிப்பிடக் கூட பலசமயங்களில் தவறுகின்றனர்.
எண்ணிக்கையே துல்லியமற்ற ஆய்வு மூலம் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. ஒரு படகு காணாமல் போனதாக தகவல் வந்தால் பதிவாகும், ஆனால் அது கடைசியில் (தாமதமாக) துறைமுகத்திற்கு திரும்பியிருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போயிருக்கும்.
சில சம்பவங்கள் உண்மையில் நிகழவேயில்லை. புளோரிடாவின் டேடோனா கடற்கரையில் 1937 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்து நூற்றுக்கணக்கானோர் பார்க்க நிகழ்ந்ததாக கூறப்பட்டது; ஆனால் உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்தால் அப்படி எதுவுமேயில்லை.
பெர்முடா முக்கோணத்தின் புராணம் என்பது ஒரு கட்டுக்கதையான மர்மம்....இது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ தவறான கருத்துகள், பிழையான காரணங்கள், மற்றும் பரபரப்பு ஏற்படுத்தும் எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்திய கட்டுரை ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.


[தொகு] கூடுதல் மறுமொழிகள்"தி பெர்முடா டிரையாங்கிள்" என்னும் ஜான் சிம்மன்ஸ் தயாரித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்முடா முக்கோண பகுதியில் அசாதாரணமான பெரும் எண்ணிக்கையில் கப்பல்கள் மூழ்கினவா என்று கடல் காப்பீடு நிறுவனமான லாயிட்'ஸ் ஆஃப் லண்டன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. லாயிட்'ஸ் ஆப் லண்டன், அங்கு பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் மூழ்கியிருக்கவில்லை என்று கண்டறிந்தது.[15]


அமெரிக்க கடலோரக் காவல்படையின் பதிவுகள் அவர்களது முடிவை உறுதிப்படுத்துகின்றன. உண்மையில், இந்த பகுதியில் வழக்கமாகச் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் காணாமல் போனதாகக் கூறப்படும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதாகும்.[மேற்கோள் தேவை]


கடலோரக் காவல்படையும் அதிகாரப்பூர்வமாக இந்த முக்கோணம் குறித்து பல சந்தேகங்கள் கொண்டுள்ளது. முக்கோணம் குறித்து எழுதும் ஆசிரியர்களால் எழுதப்பட்ட பல சம்பவங்களுக்கு முரண்படுகிற பல ஆவணத் தொகுப்புகளை தங்களின் விசாரணைகள் மூலம் சேகரித்து, வெளியிடுவதாகவும் அது தெரிவிக்கிறது. 1972 ஆம் ஆண்டில் மெக்சிகோ வளைகுடாவில் வி.ஏ.ஃபாக் என்னும் கப்பல் வெடித்து மூழ்கிய இத்தகையதொரு சம்பவத்தில், கடலோரக் காவல்படை இந்த சிதறல்களை படம் பிடித்ததோடு பல உடல்களையும் மீட்டது.[16] ஒரு முக்கோணக் கதை ஆசிரியரோ, தனது அறையில் ஒரு காபி கோப்பையுடன் அமர்ந்திருந்த கேப்டன் தவிர மற்றவர்கள் மாயமானதாகக் கூறியிருந்தார்.[10]


பிபிசி தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தி கேஸ் ஆஃப் பெர்முடா டிரையாங்கிள் என்னும் அத்தியாயத்தில் இது குறித்து மிகவும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. "நாங்கள் உண்மையான மூலங்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களிடம் போனால், மர்மம் கரைந்து போய் விடுகிறது. விஞ்ஞானம் முக்கோணம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் முதலில் இந்த கேள்விகளே உண்மையானதல்ல. ...உலகின் மற்ற எங்கும் போலத் தான் இங்கும் கப்பல்களும் விமானங்களும் செயல்படுகின்றன."[17]


எர்னஸ்ட் டேவ்ஸ்[18] மற்றும் பேரி சிங்கர்[19] ஆகிய ஆய்வாளர்கள், மர்மங்களும் அமானுடங்களும் எவ்வளவு பிரபலமானவையாகவும் ஆதாயமளிப்பவையாகவும் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். பெர்முடா முக்கோணம் போன்ற தலைப்புகளில் ஏராளமான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. அமானுடத்திற்கு ஆதரவான சில விஷயங்கள் பல சமயங்களில் தவறாக வழிநடத்துகின்றன அல்லது துல்லியமற்றவையாக இருக்கின்றன, இருப்பினும் அதன் உற்பத்தியாளர்கள் அதனை தொடர்ந்து சந்தைப்படுத்துகிறார்கள் என்பதை அவர்களால் நிரூபிக்க முடிந்தது. அதற்கேற்றாற்போல, சந்தையும் முக்கோண மர்மத்தை ஆதரிக்கும் புத்தகங்கள், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு சாதகமாக இருக்கிறது, சந்தேகம் எழுப்பும் நல்ல ஆய்வு விடயங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இறுதியாக, இப்பிராந்தியத்தின் எந்த நிலப்பரப்பில் செல்லும் வாகனங்களும் அல்லது நபர்களும் காணாமல் போனதற்கு எந்த சான்றும் இல்லை.[மேற்கோள் தேவை] முக்கோணத்திற்குள் அமைந்திருக்கும் ஃப்ரீபோர்ட் நகரம் ஒரு பெரும் கப்பல்துறைமுகத்தையும் வருடத்திற்கு 50,000 விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையத்தையும் கையாள்கிறது. ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.




[தொகு] அமானுட விளக்கங்கள்இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக முக்கோணம் குறித்த எழுத்தாளர்கள் ஏராளமான அமானுட கருத்துகளை பயன்படுத்தியுள்ளனர். புராணவகை தொலைந்த கண்டமான அட்லாண்டிஸில் இருந்து எஞ்சியிருக்கும் நுட்பம் தான் இது என்று ஒரு விளக்கம் கூறுகிறது. சிலசமயம், பஹாமாஸில் பிமினி தீவில் உள்ள பிமினி பாதை என்று அழைக்கப்படும் கடலுக்கடியிலான பாறை உருவாக்கம் அட்லாண்டிஸ் கதையுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இந்த பகுதி சில வரையறைகளின் படி முக்கோணத்திற்குள் அமைகிறது. ஆவியூடாடும் எட்கர் கெய்ஸின் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அட்லாண்டிஸ் ஆதாரம் 1968 ஆம் ஆண்டு கண்டறியப்படும் என்று அவர் கணித்துக் கூறியது, பிமினி பாதையின் கண்டுபிடிப்பைத் தான் குறித்ததாகக் கொண்டனர். நம்புபவர்கள் இதனை ஒரு பாதை, சுவர் அல்லது வேறு கட்டமைப்பின் உருவாக்கம் என்று சொல்கிறார்கள், ஆயினும் மண்ணியல் ஆய்வாளர்கள் இதனை இயற்கையாக அமைந்தது என்கிறார்கள்.[20]


பிற எழுத்தாளர்கள் இந்த நிகழ்வுகளுக்கு வெளிக்கிரகவாசிகளை காரணம் காட்டுகிறார்கள்.[21] இந்த கருத்தினை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது அறிவியல் புனைவுத் திரைப்படமான க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்டு கைன்ட் என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தினார்.


புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார். முக்கோணப் பகுதியில் நிகழும் தொலைதல்களுக்கு அமானுட அல்லது விளக்கமுடியாத சக்திகள் தான் காரணம் என்று அவர் கூறினார்.[11]




[தொகு] திசைகாட்டி மாறுதல்கள்பல முக்கோண நிகழ்வுகளில் கூறப்படும் பதப் பிரயோகங்களில் ஒன்று திசைகாட்டி பிரச்சினைகள். அசாதாரணமான காந்த அலைகள் இப்பகுதியில் இருக்கலாம் என்று சிலர் சித்தாந்தப்படுத்தினாலும்,[22] அத்தகைய அலைகள் எதுவும் இருப்பதாக அறியப்படவில்லை. காந்த துருவங்களுடன் தொடர்புபட்ட இயல்பான காந்த மாறுபாடுகளை மட்டும் திசைகாட்டிகள் கொண்டுள்ளன. உதாரணமாக, அமெரிக்காவில் காந்த (திசைகாட்டி) வடக்கும் புவியியல்ரீதியான (உண்மையான) வடக்கும் எங்கு ஒன்றாக அமைந்திருக்கிறது என்றால் விஸ்கோன்சின் தொடங்கி மெக்சிகோ வளைகுடா வரையிலான ஒரு கோட்டிலுள்ள இடங்களில் தான். கடல்பயணதாரர்களுக்கு இது பல நூற்றாண்டுகளாகத் தெரியும். ஆனால் பொதுமக்களுக்கு அந்த அளவு பொதுஅறிவு இருக்காது என்பதால், அவர்கள் முக்கோணம் போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி "மாறுவதில்" ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறார்கள்.




திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள்திட்டமிட்ட அழிவு நடவடிக்கைகள் இரண்டு வகையாக இருக்கலாம்: போர் நடவடிக்கைகள், கடற்கொள்ளை நடவடிக்கைகள். எதிரிகளின் பதிவுக் குறிப்புகள் பல சம்பவங்களின் போது சோதிக்கப்பட்டிருக்கின்றன; பல கப்பல்கள் மூழ்கியதற்கு உலகப் போர்களின் போதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்கள் காரணமாகக் கூறப்பட்டு பல்வேறு உத்தரவு பதிவுப் புத்தகங்களில் ஆவணப்பட்டிருக்கின்றன. இந்த வகையினதாகக் கூறப்படும் இன்னும் பல சம்பவங்களுக்கான காரணங்கள் நிரூபிக்கப்படாதவை.

ஒரு கப்பல் அல்லது சிறு படகை நடுக்கடலில் முற்றுகையிட்டு கொள்ளையிடுவது தான் கடற்கொள்ளை என்று வரையறுக்கப்படுகிறது. இது இன்று வரை நடந்து வரும் ஒரு நடவடிக்கையாகும். சரக்கு திருடும் கடற்கொள்ளை மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ரொம்பவும் சாதாரணமானமாக நிகழ்கிறது. அதே சமயத்தில் மருந்து கடத்தல்காரர்கள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு சொகுசுப் படகுகளை கடத்துகிறார்கள். கரீபியனில் ஊழியர்கள் மற்றும் படகுகள் கடத்தலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம். கரீபியன் பகுதியில் கடற்கொள்ளை என்பது சுமார் 1560கள் தொடங்கி 1760கள் வரை சாதாரண நிகழ்வுகளாக இருந்தது. எட்வர்டு டீச் பிளாக்பேர்டு மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடங்குவர்.[மேற்கோள் தேவை]




வளைகுடா நீரோடைவளைகுடா நீரோடை என்பது மெக்சிகோ வளைகுடாவில் தோன்றி, பின் புளோரிடா நீரிணைப்பு வழியாக, வட அட்லாண்டிக் கடல் வரை செல்லும் கடல் ஓடையாகும். இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறு போன்றது. ஒரு ஆறு போலவே, இது மிதக்கும் பொருட்களை சுமந்து செல்கிறது. [23] சிறு விமானம் நீரில் விழுந்து விட்டாலோ அல்லது ஏதேனும் படகு எந்திரக் கோளாறினால் நின்று விட்டாலோ அது தெரிவிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீரோடை வழியே சுமந்து செல்லப்படும். இது தான் விட்ச்கிராஃப்டு படகுக்கு டிசம்பர் 22, 1967 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. கடற்கரையில் இருந்து ஒரு மைல் (1.6 கிமீ) தூரத்தில் மியாமி மிதவை குறியீடு அருகே இப்படகு பழுதடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் கடலோரக் காவல்படை கப்பல் அங்கு சென்றபோது அது அந்த இடத்தில் இல்லை.




மனிதத் தவறுவிமானம் அல்லது கப்பல் காணாமல் போவதற்கு அதிகாரப்பூர்வ விசாரணைகளின் போது கூறப்படும் காரணங்களில் மிக அதிகமானது மனிதத் தவறாகும்.[24] வேண்டுமென்றோ அல்லது தற்சமயமாகவோ, மனிதர்கள் தவறு செய்வார்கள் என்பது அறிந்ததே. இது பெரும் துயரச் சம்பவத்தில் சென்று முடிகிறது. இதற்கு பெர்முடா முக்கோணப் பகுதி இழப்புகள் விதிவிலக்கல்ல. உதாரணமாக வி.ஏ.ஃபாக் 1972 ஆம் ஆண்டில் தொலைந்து போனதற்கு ஆவியாகும் பென்சீன் கழிவை சுத்தப்படுத்துவதற்கு முறையான பயிற்சி இல்லாதிருந்ததை கடலோரக் காவல் படை ஒரு காரணமாக சுட்டிக் காட்டியது [மேற்கோள் தேவை]. வர்த்தக அதிபரான ஹார்வே கனோவர் தனது பயணப் படகான ரெவோனோகை இழந்ததற்கு மனிதப் பிடிவாதமும் காரணமாய் இருந்திருக்கலாம், ஏனென்றால் அவர் தெற்கு புளோரிடாவில் ஜனவரி 1, 1958 அன்று புயலின் விளிம்பில் படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்.[25] ஆய்வு செய்வதற்கு உடைந்த வாகனம் கிடைக்காது போய்விடுவதால் பல இழப்புகள் இன்னும் தீர்மானத்திற்கு வர முடியாததாகவே தொடர்கின்றன. இது பல அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் காட்டப்படும் ஒரு உண்மையாகும்.

சூறாவளிகள்சூறாவளிகள் வெப்பமண்டல கடல் பகுதியில் பரவலாய்க் காணப்படும் சக்திவாய்ந்த புயல்களாகும். இது ஆயிரக்கணக்கான உயிர்களின் இழப்பிற்கும் பில்லியன்கணக்கான டாலர்கள் சேதாரத்திற்கும் காரணமாய் இருந்திருக்கிறது. 1502 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கோ டி போபடில்லாவின் ஸ்பெயின் குழுக் கப்பல்கள் மூழ்கியது தான் சூறாவளிப் பேரழிவின் முதல் பதிவு செய்யப்பட்ட சம்பவம். இந்த புயல்கள் கடந்த காலத்தில் முக்கோணம் தொடர்பான ஏராளமான சம்பவங்களுக்கும் காரணமாய் அமைந்திருக்கின்றன.




மீத்தேன் ஹைட்ரேட்டுகள்சில தொலைதல்களுக்கான விளக்கம் கரையோரப் பகுதி அடுக்குகளில் பரந்த மீத்தேன் ஹைட்ரேட் (இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவம்) மீது மையம் கொண்டுள்ளது.[26] ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், நீரின் அடர்த்தியை குறைப்பதினால் குமிழிகள் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு கொண்ட கப்பலை மூழ்கச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றன.[27] இதனைத் தொடர்ந்து எழும் எந்த உடைந்த பாகங்களும் துரிதமாக வளைகுடா நீரோடையால் சிதறச் செய்யப்படுகின்றன. திடீர் மீத்தேன் வெடிப்புகள் (சில சமயங்களில் "சேறு எரிமலைகள்" என அழைக்கப்படுகின்றன) கப்பல்கள் மிதப்பதற்கு தேவையான மிதவைத் தன்மையை வழங்க முடியாத சகதி நீர் பிராந்தியங்களை உருவாக்கலாம் என்கிற ஒரு அனுமானம் வைக்கப்படுகிறது. இது உண்மையாய் இருந்தால், ஒரு கப்பலை சுற்றி உருவாகும் இத்தகையதொரு பகுதி கப்பல் வெகு துரிதமாக எச்சரிக்கையின்றி மூழ்கக் காரணமாகி விடும்.


அமெரிக்க நிலவியல் துறை ஆய்வு வெளியீடுகள், கடலுக்கடியான ஹைட்ரேட்டுகள் உலகெங்கிலும் பெரும் சேகரங்களாக இருப்பதாக கூறுகிறது. தென்கிழக்கு அமெரிக்க கடற்கரையை ஒட்டிய ப்ளேக் ரிட்ஜ் பகுதியிலும் இச்சேகரங்கள் மிகுதியாய் காணப்படுகின்றன.[28] ஆயினும், பெர்முடா முக்கோணப் பகுதியில் கடந்த 15,000 வருடங்களில் எரிவாயு ஹைட்ரேட்டுகளின் பெரும் வெளியீடுகள் எதுவும் இருந்ததாக விபரமில்லை என்று அவர்களது ஆய்வறிக்கைகளில் இன்னொன்று தெரிவிக்கிறது.[15]


கடலுக்கடியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் கொண்டுள்ள மற்ற பகுதிகளில் பெர்முடா முக்கோணம் போன்ற சம்பவங்கள் நிகழவில்லை என்பதும், நீருக்கடியிலான எரிவாயு குமிழிகள் விமானங்கள் மறைந்து போனதற்குக் காரணமாக முடியாது என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

முரட்டு அலைகள்உலகின் பல கடல்களில், முரட்டு அலைகள் கப்பல்கள் மூழ்குவதற்கும்[29] எண்ணெய் கப்பல்கள் கவிழ்வதற்கும் காரணமாய் அமைந்துள்ளன.[30] இந்த அலைகள் மர்மமானவையாக கருதப்படுவதோடு சமீப காலம் வரை ஒரு மூடநம்பிக்கையாகவும் கருதப்பட்டு வந்தது.ஆயினும், முரட்டு அலைகள் காணாமல் போன விமானத்திற்கு காரணமாக முடியாது.




குறிப்பிடத்தக்க சம்பவங்கள்[தொகு] பிளைட் 19பிளைட் 19 என்பது குண்டு வீசும் விமானங்களுக்கு பயிற்சியளிக்கும் விமானமாகும். இது டிசம்பர் 5, 1945 அன்று அட்லாண்டிக் மீது பறக்கையில் மறைந்து போனது. போர்க்கப்பலில் இருந்தான விமான பாதை, கிழக்கே 120 மைல், வடக்கே 73 மைல்கள் பின் மீண்டும் இறுதியாக 120 மைல் பயணத்தில் கடற்படை தளத்திற்கு திரும்புவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவை திரும்பவில்லை. விமானம் அசாதாரண நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும், விமானம் பறந்தது ஒரு அமைதியான நாளில் அனுபவப்பட்ட விமானியான லெப்டினென்ட். சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. "புரியாத காரணங்கள் அல்லது விளைவுகளால்" நிகழ்ந்ததாக கடற்படை அறிக்கை இந்த விபத்து குறித்து கூறுவது குழப்பத்தை அதிகப்படுத்துவதாக இருக்கிறது. டெய்லரின் தாய் தனது மகனின் மரியாதையைக் காப்பாற்றுவதற்காகவே, அவர்களை "புரியாத காரணங்கள்" என்று எழுதச் செய்ததாக நம்பப்படுகிறது. உண்மையில் டெய்லர் அவர் இருந்ததாக நினைத்த இடத்தில் இருந்து வடமேற்கில் 50 கிமீ தூரத்தில் இருந்தார்.[33]


இந்த மர்மத்திற்கு மர்மம் சேர்க்கும் விதமாக, காணாமல் போன கப்பலுக்கு உதவ 13 பேர் கொண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கான கப்பல்படை விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்குப் பின் அந்த விமானத்தில் இருந்தே ஒரு தகவலும் இல்லை. பின்னர், புளோரிடா கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்தவர்கள் இந்த விமானம் ரோந்தில் இருந்திருக்கக் கூடிய அந்த தருணத்தில் ஒரு வெடிப்பு நிகழ்ந்ததை கண்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் இந்த கதையில் அடிப்படை உண்மைகள் துல்லியமானவையாக இருக்கின்றன, ஆனால் முக்கியமான சில விவரங்கள் இல்லாமலிருக்கின்றன. சம்பவம் நடந்து முடிந்த சமயம் காலநிலை கொந்தளிப்பானதாக மாறியிருந்தது. அத்துடன் டெய்லருக்கும் பிளைட் 19 விமானக் கூட்டத்தின் பிற விமானிகளுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் குறித்த கடற்படை அறிக்கைகள் மற்றும் எழுதப்பட்ட பதிவுகள் காந்தப் பிரச்சினைகள் இருந்ததாய் சுட்டிக் காட்டவில்லை.




மேரி செலஸ்டி1872 ஆம் ஆண்டில் 282 டன்கள் எடை கொண்ட இருதூண்கப்பல் மேரி செலஸ்டி மர்மமான முறையில் தொலைந்து போனது. பல சமயங்களில் இச்சம்பவம் தவறாக முக்கோணத்துடன் இணைத்துக் கூறப்படுகிறது. கப்பல் போர்ச்சுகல் கடலோரத்தில் தொலைந்திருந்தது. இந்த சம்பவம் அநேகமாக மேரி செலஸ்டி என்னும் அதே பெயரிலான 207 டன் துடுப்புக் கப்பல் 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று பெர்முடா கடலோரத்தில் தரை தட்டி பின் விரைவாக நீருக்குள் மூழ்கிய சம்பவத்துடன் குழப்பப்பட்டிருக்கலாம்.[34][35] இந்த சம்பவம் குறித்த பல "உண்மைகள்" உண்மையில் மேரி செலஸ்டி என்னும் ஆர்தர் கோனான் டாயிலின் "ஜே. ஹபகுக் ஜெப்சனின் வாக்குமூலம்" (உண்மையான மேரி செலஸ்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் கற்பனை சேர்க்கப்பட்டது) என்னும் சிறுகதையில் வரும் கற்பனைக் கப்பலில் இருந்து உதித்தவை என்று குசெ குறிப்பிடுகிறார்.




எலன் ஆஸ்டின்1881 ஆம் ஆண்டில் எலன் ஆஸ்டின் ஒரு அநாதையாக வந்த கப்பலைக் கண்டார். அதில் மீட்பு ஊழியர்களை நிறுத்தி, அதனுடன் சேர்ந்து நியூயார்க் வர முயற்சி செய்தார். இந்த அநாதைக் கப்பல் திரும்பவும் மீட்பு ஊழியர்கள் இன்றி தோன்றியதாகவும், திரும்பவும் இரண்டாவது முறையாக மீட்பு ஊழியர்களுடன் காணாமல் போனதாகவும் சிலர் விவரிக்கின்றனர். [36]




யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்அமெரிக்க கடற்படை வரலாற்றில் போர் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. 1918, மார்ச் 4 ஆம் தேதிக்கு பிந்தையதொரு காலத்தில் பார்படோஸ் தீவுகளில் இருந்து கிளம்பிய யுஎஸ்எஸ் "சைக்ளோப்ஸ்" என்னும் கப்பல் ஒரு சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் காணாமல் போனது. எந்த ஒரு ஒற்றை கருத்திற்கும் வலுவான ஆதாரமில்லை எனினும், பல்வேறு சுதந்திரமான கருத்துகள் உலவுகின்றன. சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர் எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள்.[37][38]




தியோடோசியா பர் அல்ஸ்டான்தியோடோசியா பர் அல்ஸ்டான் என்பது முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதியான ஆரான் பர்ரின் மகளாவார். அவர் காணாமல் போனதுடன் முக்கோணத்திற்கு தொடர்பு இருப்பதாய் சில சமயங்களில் கூறப்படுகிறது.[39] தெற்கு கரோலினாவில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு டிசம்பர் 30, 1812 அன்று சென்ற பேட்ரியாட் கப்பலில் அவர் ஒரு பயணியாக இருந்தார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கடற்கொள்ளை மற்றும் 1812 ஆம் ஆண்டுப் போர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று காரணமாய் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதே போல் முக்கோணத்திற்கு நன்கு வெளியே டெக்சாஸ் பகுதியில் அவர் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கருத்தும் நிலவுகிறது.

ஸ்ப்ரேஎஸ்.வி. ''ஸ்ப்ரே என்னும் ஒரு அநாதையாய் நின்ற மீன்பிடி படகினை கடல் பயணக் கப்பலாக மாற்றிய ஜோஸ்வா ஸ்லோகம் என்பவர், அதனை 1895 மற்றும் 1898 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல்முறையாய் உலகெங்கும் தனியாளாக சுற்றிவரும் தனது சாதனை முயற்சியை நிறைவு செய்யப் பயன்படுத்தினார்.

1909 ஆம் ஆண்டில், ஸ்லோகம் வினியார்டு ஹேவனில் இருந்து வெனிசூலாவுக்கு பயணத்தை துவக்கினார். அவரையும் சரி ஸ்ப்ரே யையும் சரி அதற்குப் பின் காணவில்லை.

அவர்கள் காணாமல் போன போது பெர்முடா முக்கோண பகுதியில் இருந்தார்கள் என்பதற்கோ, அல்லது அமானுட நடவடிக்கை இருந்ததற்கோ சான்று எதுவும் இல்லை.

கரோல் ஏ. டீரிங்1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஐந்து கலக்கூம்புகள் கொண்ட பாய்மரக் கப்பலான கரோல் ஏ. டீரிங் வடக்கு கரோலினாவின் கேப் ஹட்டராஸ் அருகே ஜனவரி 31, 1921 வாக்கில் அநாதையாய் முழுக்க தரை தட்டிக் கிடந்தது. அந்த சமயத்தின் வதந்திகளும் இன்ன பிறவும் டீரிங் கடற்கொள்ளைக்கு பலியாகி இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டின. மருந்துக் கடத்தல் தடை சமயத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்பட்டதுடன் இச்சம்பவத்திற்கு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அத்துடன் ஏறக்குறைய அதே சமயத்தில் காணாமல் போன எஸ்.எஸ்.ஹெவிட் என்னும் இன்னொரு கப்பலுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்றும் அத்தகவல்கள் தெரிவித்தன. [40]

டக்ளஸ் டிசி-3டிசம்பர் 28, 1948 அன்று, டக்ளஸ் டிசி-3 விமானம் ஒன்று பூர்டோ ரிகோவின் சான் ஜூவானில் இருந்து மியாமி நோக்கி பறந்து செல்கையில் மறைந்து போனது. விமானம் அல்லது அதில் பயணித்த 32 பேர் குறித்த எந்த சுவடும் அதற்குப் பின் கிடைக்கவில்லை. பயணிகள் விமானத்துறை வாரிய விசாரணையில் இருந்து தொகுக்கப்பட்ட ஆவணத்தில், விமானம் காணாமல் போனதற்கான ஒரு சாத்தியமுள்ள குறிப்பு கிடைத்தது. ஆனால் இது முக்கோண எழுத்தாளர்களால் அதிகம் தொடப்படவில்லை. சான் ஜூவானில் இருக்கும் போது விமானத்தின் மின்கலங்கள் சோதிக்கப்பட்டபோது அவை மின்னூட்டம் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் மறுமின்னூட்டம் செய்யாமலேயே மீண்டும் விமானத்தில் கொண்டு வைக்க விமான ஓட்டி உத்தரவிட்டார். இது ஒருவேளை முழுமையான மின்சார துண்டிப்புக்கு இட்டுச் சென்றதா இல்லையா என்பது ஒருபோதும் அறியப்படாதது. [41]

ஸ்டார் டைகர் மற்றும் ஸ்டார் ஏரியல்அசோர்ஸில் இருந்து பெர்முடா செல்கையில் ஜனவரி 30, 1948 அன்று ஒரு பயணிகள் விமானம் காணாமல் போனது. பெர்முடாவில் இருந்து ஜமைக்காவின் கிங்ஸ்டனுக்கு பறந்து செல்கையில் ஜனவரி 17, 1949 அன்று இன்னொரு பயணிகள் விமானம் காணாமல் போனது. இரண்டுமே தென் அமெரிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் இயக்கிய ஒரே ரக பயணிகள் விமானங்கள் ஆகும்.[42]




எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன்எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன் என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய் சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன் தொலைந்து போனது. 1963, பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு அதில் இருந்து எந்த தகவலும் இல்லை.மரைன் சல்பர் குவீன் தான் வின்சென்ட் கேடிஸ் 1964 ஆம் ஆண்டில் எழுதிய அர்கோசி இதழ் கட்டுரை[8]யில் குறிப்பிடப்பட்ட முதல் வாகனம் ஆகும். ஆனால் அவர் அதில் "காணமுடியாத இடத்திற்கு சென்று விட்டது" என்று விட்டு விட்டார். ஆனால் கடலோரக் காவல் படையின் அறிக்கை கப்பல் மோசமாகப் பராமரிக்கப்பட்ட வரலாறை ஆவணப்படுத்தியிருக்கிறது என்பதோடு, அது கடலுக்குள் செல்ல உகந்த கப்பல் அல்ல என்பதால் கடலுக்குள்ளேயே சென்றிருக்கக் கூடாது என்று அறிவித்தது.[43][44]




ரய்ஃபுகு மருமுக்கோணப் பகுதியில் 1921 ஆம் ஆண்டில் மிகப் பிரபல சம்பவம் ஒன்று நிகழ்ந்தது (சிலர் அதற்கு சில வருடங்கள் கழித்து என்கிறார்கள்). ஜப்பானிய கப்பலான ரய்ஃபுகு மரு (சிலர் இதனை ரய்குகே மரு என்று தவறாகப் புரிந்து கொண்டார்கள்) அப்படியே அனைத்து பாகங்களும் மொத்தமாக மூழ்கி விட உள்ளே சென்று விட்டது. முன்னதாக அது "கத்திக்கூம்பு போல் இப்போது அபாயம் தெரிகிறது, விரைவாய் உதவிக்கு வாருங்கள்!" என்பது போன்ற அபாய சமிக்ஞை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. "கத்திக்கூம்பு" என்பது அநேகமாக நீரலைக் கூம்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. உண்மையில், கப்பல் முக்கோணப் பகுதிக்கு அருகிலேயே இல்லை. அத்துடன் "கத்திக்கூம்பு" என்கிற வார்த்தையும் கப்பலின் அபாய சமிக்ஞையில் இல்லை.[45]
கன்னிமரா IV1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. கடலில் இருந்த சமயத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியும் படகு தப்பித்துக் கொண்டது, ஆனால் அதில் இருந்த ஊழியர்கள் மாயமாகி விட்டார்கள் என்று இந்த சம்பவக் கதைகளில் பொதுவாகக் கூறப்படுகிறது . 1955 ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவ பட்டியல்களோ ஆகஸ்டு இறுதிவாக்கில் பெர்முடா அருகில் "எடித்" என்னும் ஒரே ஒரு புயல் மட்டுமே வந்ததாகக் குறிப்பிடுகிறது. மற்ற புயல்களில் "புளோரா" கிழக்கே வெகு தொலைவில் வந்தது, "கேதி" படகு மீட்கப்பட்ட பின் தான் வந்தது."எடித்" இந்த படகை கட்டுப்பாடிழந்து கடலுக்குள் போகச் செய்ய நேர்ந்த சமயத்தில் கன்னிமரா IV காலியாகத் தான் இருந்தது. துறைமுகத்தில் தான் நின்று கொண்டிருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.[மேற்கோள்

Saturday, March 5, 2011

சுப்பிரமணியன் சந்திரசேகர்


சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) (அக்டோபர் 19, 1910 - ஆகஸ்ட் 21, 1995) வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர்[1][2] விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1937 இலிருந்து 1995 இல் இறக்கும் வரை சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். இவர் 1953இலிருந்து ஐக்கிய அமெரிக்கக் குடிமகனாவார்.



வாழ்க்கைக் குறிப்பு
C. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் பிறந்தவர் சந்திரசேகர். இவருடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, மற்றும் சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், மற்றும் ராமநாதன்) [3]. லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது; பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் [4].

மாநிலக்கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். இப்படிப்பின் போதுதான் 1928ல் அவரது சித்தப்பா சர். சி. வி. இராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது [5].

1928-ல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்த போது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கெனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தக்ங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார்.[6] அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரையை ஒத்த சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது. மேலும், அதற்கடுத்த வருடம் -- 19வது வயதில், இன்னும் இளங்கலை மாணவராக இருக்கையிலேயே -- மேலும் இரு கட்டுரைகளும்[7] பதிப்பாயின [8].

1930-ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பண உதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்திற்குப் பயணித்தார்.[9]

Thursday, March 3, 2011

மேரி க்யூரி


மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.


வாழ்க்கைக் குறிப்பு

மரியா ஸ்லொடஸ்கா (Maria Skłodowska) என்பதே இவரது இயற்பெயராகும். இளமைக்காலத்தில் இவரின் செல்லப்பெயராக மான்யா (Manya) விளங்கியது. இவர் பிறந்தபோது போலந்து ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. மேரி கியூரியின் பெற்றோர்கள் ஆசிரியர்களாவர். ஐந்தாம் குழந்தையாக மேரி கியூரி பிறந்த பின்பு பெற்றோர் இருவரும் தமது ஆசிரியத் தொழிலை இழந்தனர். பாடசாலையில் அவ்வளவாக பிரகாசிக்காத மேரிக்கு உயர் கல்வி வாய்ப்பும் கிட்டவில்லை; ஏனெனில் அந்நேரம் போலந்தில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கப்படவில்லை. இறுதியில் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலைக்குச் சேர்ந்தார். இவ்வேலை மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை பாரிசில் மருத்துவக் கல்வி கற்ற இவரது சகோதரிக்கு அனுப்பினார். 1891இல் இவரது சகோதரி சக வைத்தியர் ஒருவரைத் திருமணம் செய்தார்.

பின்பு இவர் பாரிசில் உள்ள தனது சகோதரியுடன் இணைந்து கொண்டார். இங்கு தனது பெயரை மேரி என மாற்றிக்கொண்டார். தற்போது பாரிஸ் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இடத்தில் (சார்போன்-Sorbonne) இயற்பியல் மற்றும் கணிதத்துறையில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

1894இல் பிரஞ்சு விஞ்ஞானியான பியரி கியூரியை (Pierre Curie) திருமணம் செய்து கொண்டார்.

ஆராய்ச்சிகள்
போலந்து நாட்டு நாணயம் - மேரி கியூரி படத்துடன்

* 1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
* 1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.
* 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.


கணவரின் மரணத்தின் பின்பு

1906 இல் கணவரின் அகால மரணத்தின் பின்பு சார்போனில் கணவரின் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அங்கு கல்வி கற்பித்த முதலாவது பெண் எனும் பெருமையையும் பெற்றார். இவர் தனது சக்தி முழுவதையும் ஆராய்ச்சிக்காகவும் தன் பெண் குழந்தைகளை கவனிக்கவும் செலவிட்டார். 1920களில் இவரின் உடல் நலம் சீர்கெடத்தொடங்கியது. 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.

தாமசு ஆல்வா எடிசன்


தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். "மென்லோ பூங்காவின் மேதை" என்றழைக்கப்பட்ட எடிசன், திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். இவர் சாமுவேல் எடிசனுக்கும் நான்சி மாத்தியூஸ் எலியட் என்பாருக்கும் கடைக்குட்டியாக பிறந்தார். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.


குடும்பநிலை

தாமசு ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை; அவரது பெற்றோர் நடுத்தர வகுப்பினர். தாமசு பிறந்த போது (1847) அவரது குடும்பம் ஓகையோவிலுள்ள மிலனில் வசித்து வந்தது. பின்னர் அவர்கள் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
படிப்பு

பள்ளியில் ஏழு வயதுச் சிறுவனான தாமசு ஆசிரியரைக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுப்பாராம் - ”குழப்பவாதி” என்று கூறுமளவிற்கு! ஆனால், தாமசின் தாயார் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். எனவே, பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார் - மூன்று ஆர்களையும் (reading, writing and arithmetic) பைபிளையும். தாமசின் தந்தை சாமுவேல் பழங்கதைகளைப் படிக்குமாறு ஊக்கப்படுத்தினார் - ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.

பன்னிரண்டாம் வயதில் அறிவியல் பக்கம் அவரது நாட்டம் குவிய ஆரம்பித்தது. தாமசின் கேள்விகளை அவரது பெற்றோரால் சமாளிக்க இயலவில்லை. நியூட்டனின் பிரின்சிப்பியாவைப் படிக்க ஆரம்பித்தார் தாமசு. இந்த வயதில் தான் தாமசின் ”விடாமுயற்சி” வெளிப்பட ஆரம்பித்தது. தாமசின் நிறையாகவும் குறையாகவும் இருந்தது அவரது குறைந்த கேட்குந்திறன்.

முதல் வேலை

1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பரிபோனது!

பிற வேலைகள்

இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார் சில காலம்; பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். 1862 சமயம், ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், ஓடும் இரயில் வண்டியிலிருந்த படியே! அக்டோபர் 28, 1868 அன்று முதல் காப்புரிமைக்கு (மின் வாக்குப்பதிவி) விண்ணப்பித்தார்.


முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று.