Tuesday, February 8, 2011

ராஜராஜன்:உலக சாதனை

தக்கலை : தக்கலை இளைஞர் ராஜராஜன் கடம் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினார். தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நடராஜன் மகன் ராஜராஜன். இவர் படித்து கொண்டிக்கும் போது தனது 17வது வயதில் தபேலா கற்றுக்கொண்டார். பின் கடம் என்னும் இசைக்கருவியை கற்று அதில் திறம்பட தாளங்களை இசைத்தார். இதனால் இளம்பருவத்திலேயே கடம் வாசிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல இசைநிகழ்ச்சிகளில் கடம் வாசித்துள்ளார். அகில இந்திய வானொலி நிலையத்தில் ஏ கிரேடு வித்வானாக இருந்து வருகிறார். தான்கற்ற வித்தையை சாதனையாக்கி காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உலக சாதனை நிகழ்த்துவதற்காக ஒரு ஆண்டாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். ஒரு நிமிடத்தில் ஆயிரத்து 200 தாளசொற்கள் வாசிக்கும் திறனை பெற்ற இவர் பொதுமேடையில் பலர் முன்னிலையில் சாதித்து காட்டினார். தக்கலை பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் உள்ள பாஞ்சஜன்யம் அரங்கில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் ஆத்ரேயா ராதாகிருஷ்ணன், ராஜராஜனை அறிமுகம் செய்து அனைவரையம் வரவேற்றார். எம்.இ.டி., இன்ஜி., கல்லூரி இயக்குனர் கொடிக்கல் சேக் அப்துல்லா, இசை ஆசிரியர் தென்கரை மகாராஜன், இசை கலைஞர் நாராயணன் போற்றி பேசினர். பின் இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் சேர்ந்த விவேக் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் ஆயிரத்து 200 தாள சொற்களை கடம் இசைக்கருவியில் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினார். இச்சாதனையை காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள், இசை கலைஞர்கள் வந்திருந்தனர்.

No comments:

Post a Comment